அருள்மிகு அமிர்தாம்பிகை சமேத ஸ்ரீ அர்க்கீஸ்வரர் ஸ்ரீ பிடாரி சூரியம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை-தமிழ்நாடு (அரசுக்கு உட்பட்டது) அமைந்துள்ள இடம் பம்மல் சென்னை – 600075 செங்கல்பட்டு மாவட்டம் ஸ் தல வரலாறு அன்றைய தொண்டை வள நாடு,குன்றத்தூர் கோட்டம், தற்போதய செங்கல்பட்டு மாவட்டம்.பல்லவரம் வட்டம், பல்லவரம் அருகில் , பல்லாவரம் பூவிருந்தவல்லி மார்கத்தில் உள்ள பம்மல் கிராமம், பம்மல் கிராமத்தின் மையப்பகுதியில் இத்திருக்கோயில் உள்ளது. தொன்மை / பெருமை இந்த சிவாலயம் சைவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்ட கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்க வேண்டும் என தொல்பொருள் ஆய்வு துறையால் ஊகிக்கப்படுகிறது. முதலில் செங்கற்களாலும், காறை சுண்ணாம்பாலும், கட்டப்பட்டு, பின்னர் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் அன்றைய மன்னர்களால் செதுக்கப்பட்ட கருங்கல்லையும், சுண்ணாம்புக் காறையையும் இடைவைத்து கோயில்கள் முதன் முதலாகத் தமிழ்நாட்டில் குறிப்பாக தொண்டை நாட்டில் கட்டப்பட்ட காலத்தில் பம்மலில் உள்ள இந்த அர்க்கீஸ்வரர் திருக்கோயிலும் கட்டப்பட்டிருக்க வேண்டும் என...