arulmigu arkeeswarar temple
அருள்மிகு
அமிர்தாம்பிகை சமேத ஸ்ரீ அர்க்கீஸ்வரர் ஸ்ரீ பிடாரி சூரியம்மன் திருக்கோயில்
இந்து
சமய அறநிலைய ஆட்சித் துறை-தமிழ்நாடு
(அரசுக்கு உட்பட்டது)
(அரசுக்கு உட்பட்டது)
அமைந்துள்ள
இடம் பம்மல் சென்னை – 600075
செங்கல்பட்டு
மாவட்டம்
அன்றைய
தொண்டை வள நாடு,குன்றத்தூர் கோட்டம், தற்போதய செங்கல்பட்டு மாவட்டம்.பல்லவரம் வட்டம்,
பல்லவரம் அருகில் , பல்லாவரம் பூவிருந்தவல்லி மார்கத்தில் உள்ள பம்மல் கிராமம், பம்மல்
கிராமத்தின் மையப்பகுதியில் இத்திருக்கோயில் உள்ளது.
தொன்மை / பெருமை
இந்த
சிவாலயம் சைவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்ட கி.பி. 7 – 8 ஆம் நூற்றாண்டில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு
முன் உருவாகி இருக்க வேண்டும் என தொல்பொருள் ஆய்வு துறையால் ஊகிக்கப்படுகிறது. முதலில்
செங்கற்களாலும், காறை சுண்ணாம்பாலும், கட்டப்பட்டு, பின்னர் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில்
அன்றைய மன்னர்களால் செதுக்கப்பட்ட கருங்கல்லையும், சுண்ணாம்புக் காறையையும் இடைவைத்து
கோயில்கள் முதன் முதலாகத் தமிழ்நாட்டில் குறிப்பாக தொண்டை நாட்டில் கட்டப்பட்ட காலத்தில்
பம்மலில் உள்ள இந்த அர்க்கீஸ்வரர் திருக்கோயிலும் கட்டப்பட்டிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.
இப்போதும் இதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பல்லவர் கால கருங்கற்கோயில் எனவும் கூறப்படுகிறது.
சூரியனுக்கு
அர்க்கன் எனும் சிறப்புப் பெயர் உண்டு. இவ்சிவ ஆலயத்தில் உள்ள சிவ லிங்கத்தை அர்க்கன்
வழிபட்டு பேறு பெற்றதால் இறைவன் பெயர் “அர்க்கீஸ்வரர்” என அழைக்கப்படுகிறார் என கூறப்படுகிறது.
சிவபெருமானை, சூரியபகவான் வழிபட்டு அருள் பெற்ற புண்ணிய ஸ்தலம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாடக தந்தை பம்மல் சம்பந்தனார் பிறந்து சிறிது காலம் வாழ்ந்த பெருமைமிகு பம்மலில் இந்த
திருக்கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. மறைமலை அடிகளார் போற்றுதலுடன் இக்கோயில்
பழமையின் சின்னமாக அமைந்துள்ளது. இத்திருக்கோயில் ஸ்தலம் விஸ்தாரமாக , அதாவது சுமார்
ஒரு ஏக்கர் 50 சென்ட் அளவுள்ள இடத்தில் அமைய பெற்றுள்ளது. பக்தர்கள் நெருக்கடி இன்றி,
நல்ல காற்றை சுவாசித்து, நிம்மதியுடன் வழிபட வசதியாக உள்ளது இந்த ஸ்தலம்.
ஸ்வாமிகள்
அருள்மிகு
அர்க்கீஸ்வரர்
கிழக்கு
நோக்கி உள்ள சன்னதி அர்க்கீஸ்வரர், அக்காலத்தில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள கருவறையில்
சதுர வடிவான மேடையில், ஐந்தரை அடி உயர சிவலிங்கத் திருமேனியுடன், பக்தர்களுக்கு காட்சி
அளிக்கிறார் காண்போரைக் கவரும் வண்ணம், பக்தியற்றோறையும் ஈர்க்கும் தோற்றத்துடன் கம்பீர
வடிவத்தில் வீற்றிருக்கிறார், உரிய அலங்காரத்துடன் தரிசிக்கும் போது கண்கொள்ளாக் காட்சியாக
இருக்கும்.
ஸ்வாமி
சன்னதிக்கு முன்பு பால வினாயகர் மற்றும் பால சுப்பிரமணியர் இருபக்கமும் வீற்றிருக்கிறார்கள்.
உள்ளே சிறிய அளவில் நந்தியும் பெருமானும் உள்ளார்.வெளியே மண்டப முகப்பில் மேற்கு நோக்கி
நத்திகேஸ்வரர் சன்னதி அமையபெற்றுள்ளது.
அம்பாள்
அருள்மிகு
அமிர்தாம்பிகை
ஸ்வாமிக்கு
இடது பக்கம், தெற்கு நோக்கி, தனியாக அமைந்துள்ள சன்னதியில் இருந்து அருள்பாலித்துக்
கொண்டிருக்கிறாள், அம்பாள் பாசம் அங்குசம் அபய வரத முத்திரையோடு காட்சி தருகிறாள்,
கனிவுப் பார்வையால் கருணை மனம் பொழிந்து நிற்பது, அமிர்தாம்பிகையின் தனிச் சிறப்பு
அம்பாளை பேசும் கற்சித்திரம் என்று வருணிக்கப்படுகிறது. அம்பாளுக்கு ஏற்ற அலங்காரத்துடன்
தரிசித்தால் அது ஒரு கண்கொள்ளாக் காட்சி, பார்த்துக் கொண்டே இருக்கலாம். அங்கிருந்து
விலக மனம் வராது என்பது பக்கதர்கள் கூற்று.
இந்த
அம்மன் திருக்கோயிலின் வடகிழக்கு திசையில் வடக்கு நோக்கி வீற்றிருந்து அருள் மழை பொழிந்து
கொண்டிருக்கிறாள், கிராம தேவதையாக சூரியம்மனை மக்கள் வழிபட்டு வருகிறார்கள், பிடாரி
சூரியம்மன் என்றும் அழைக்கப்பட்டு வருகிறாள்.பம்மலில்
பல வருடங்களுக்கு முன் தீவட்டி கொள்ளையர்களால் கொள்ளை அடிக்கப்பட்ட காலத்தில் இங்கு
வாழ்ந்த மக்கள் தெற்கே சென்று கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில்
குடியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரின் சந்ததியினர் இதுநாள் வரை பிடாரி
சூரியம்மன் தான் கிராம தேவதை எனக்கூறி, அனைவரும் ஆண்டுதோரும் இங்கு வந்து இந்த அம்மனை
வழிபட்டு செல்கிறார்கள், அவ்வூரைச் சுற்றியுள்ள அனைவரும் சூரியம்மன் தான் கண்கண்ட தெய்வம்,
கிராம தேவதை என்று வழிபட்டு வருகிறார்கள். இது ஒரு சிறப்பு அம்சம். இந்த அம்மனுக்கு
சித்திரை மாதம் 1 ஆம் தேதி 108 பால்குட அபிஷேகம் சிறப்பாக நடக்கிறது. ஆடி மாதம் மூன்றாவது
வாரம் திருவிழாவும், வீதிவலம் வரும் உற்சவமும் நடைபெறுகிறது. இந்த அம்மனை உரிய அலங்காரத்துடன்
தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சி.
திருப்பணிகள் / கும்பாபிஷேகம்
இத்திருக்கோயில்
மிக பழமை வாய்ந்த கோயில் ஆகும். பல்லாண்டு காலம் வசதி இன்மையால் பராமரிக்கபடாமல் இருந்தது.
இக்கோயிலின் தொன்மையையும், பெருமையையும் நாளடைவில் அறிந்து கொண்ட ஆன்மீகப் பெரியோர்கள்,
பக்தர்கள் திருக்கோயிலுக்கு வேண்டிய திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகமும் செய்யவேண்டும்
என்ற கருத்தை தெரிவித்து வந்தார்கள். அவ்வப்போது சிறிய பணிகள் செய்யப்பட்டாளும், நல்ல
தோற்றம் அளிக்க கூடிய பல திருப்பணிகள் செய்திட வேண்டும் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்திக்
கொண்டிருந்தார்கள். இதை நிறைவேற்றக் கூடிய கால கட்டமும் கை கூடி வந்தது. எனவே நடைபெற
வேண்டிய திருப்பணிகள் திருக்கோயிலின் பரம்பரை அறங்காவலர்கள் முழு ஓத்துழைப்புடன், பம்மல்
பிரதோஷ வழிபாட்டு மண்டலியின் முயற்சியில் பக்தர்கள் பேராதரவோடு, ஆன்மீக அருளாளர்கள்
உதவியுடன் சிறப்பாக முடிவடைந்து பின்னர் 27/06/2004 அன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
விமர்சையாக நடை பெற்றது. காஞ்சி காமகோடி பீடாதிபதிகளும் இத்தருணத்தில் வருகை புரிந்து
ஆசீர்வதித்தார்கள்.
இதர
சன்னதிகள்
1.ஆஞ்சநேயர்
2.
சுந்தரேச வினாயகர்
3.வள்ளி
,தெய்வானை சகிதம் சுப்பிரமணியர்
4.காசி
விஸ்வநாதர்
5.காசி
விசாலாட்சி
6.
சண்டிகேஸ்வரர்
7.
காலபைரவர்
8.அன்னமார்
9.நவக்கிரஹம்
10.
பலிப்பீடம்
11.
நந்திகேஸ்வரர்
12.சனீஸ்வரர் சன்னதி(தனி சன்னதி அமைந்துள்ள திருக்கோயில்)
கோஷ்டங்கள்
நர்த்தன
விநாயகர்
தட்சிணாமூர்த்தி
லிங்கோத்பவர்
பிரம்மா
துர்க்கை
ஆண்டு
விழாக்கள் / நிகழ்ச்சிகள்
மாதப்
பிரதோஷங்கள்
அன்னாபிஷேகம்
கலச
சங்காபிஷேகம்
மஹா
சிவராத்திரி
சாரதா
நவராத்திரி
வசந்த
உற்சவம்
தனுர்
மாத பூஜை
ஸ்தல
விருட்சம்
வெள்ளெருக்கு
திருக்கோயில் வடக்குப் பக்கத்தில் உள்ளது.
திருக்கோயிலின்
வடக்கில், சுமார் 6 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது, இத்திருக்குளம் நிலத்தடி நீர்வலம்
பெருக வாய்பாக உள்ளது. பல தொண்டு நிறுவனங்களும் அரசாங்கமும் தன்னார்வளர்களும் அவ்வப்போது
இத்திருக்குளத்தை சீர்படுத்தி தற்பொழுது எழிலுடன் காட்சி அளிக்கிறது.
ஸ்வாமி
சன்னதிக்கு எதிரே விசாலமான மண்டபம் கட்டப் பட்டுள்ளது , பக்தர்கள் வசதியாக அமர்ந்து
வழிபட ஏதுவாக இந்த மண்டபம் அமைந்துள்ளது. திருக்கோயிலுக்கு தெற்கே வசந்த மண்டபமும்
பக்தர்கள் வசதிகாக கட்டப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும்
பொதுவாக நடைபெரும் நிகழ்சிகளைத் தவிர, அவ்வப்போது பக்தர்களின் வேண்டுகோளின் படி சிறப்பு
அபிஷேகங்கள், அர்ச்சனைகள், இதர வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
பழங்கால
சிலைகள்
திருக்கோயிலுக்கு வசந்த மண்டபம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த
போது அஸ்திவார பள்ளம் தோண்டிய தருணத்தில் வசந்த மண்டப மேற்குப் பக்கத்தில் பல்லவர்
காலத்தின் ஐம்பொன் பழங்கால சிலைகள் கிடைத்தன. இச்சிலைகள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு
முந்தயதாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர், இந்த சிலைகள் தற்போது திருக்கோயிலில்
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இத்திருக்கோயில்
தாம்பரம் பல்லவரம் பூவிருந்தவல்லி பேருந்து வழித்தடத்தில், பம்மல் இரட்டைப் பிள்ளையார்
கோயில் அருகில் உள்ள அண்ணா சாலையில், சூரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ளது.
பேருந்து
வழித்தடம்
பிராட்வே-அனகாபுத்தூர்
– 60சி , 60 , 166
பிராட்வே-குன்றத்தூர்
– 60ஏ
தாம்பரம்-பூவிருந்தவல்லி- பிபி66, 66
இறங்கும்
இடம் - இரட்டைப் பிள்ளையார் கோயில்
பிராட்வே-பொழிச்சலூர்
– 52, 60ஜி
(பம்மல்
நகராட்சி அலுவலகம் நிறுத்தம்)
இறங்கும்
இடம் – விமான நிலையம்
விமான
நிலையத்திலிருந்து இரட்டைப் பிள்ளையார் கோயில் வரை இணைப்பு சிற்றுந்து இயக்கப்படுகிறது
இறங்கும்
இடம் – பல்லாவரம் இரயில் நிலையம்
திருக்கோயில் நிர்வாகம்
இத்திருக்கோயில்
நிர்வாகத்தை தொண்டை மண்டல துளுவ வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக
பரிபாலனம் செய்து வருகிறார்கள். அந்த வம்ச வழியால் தற்போது காலஞ்சென்ற மா.வேதகிரி முதலியார்
குமாரர்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுகள் நிர்வாகம் செய்து வருகிறார்கள்.
இத்திருக்கோயில்
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது
தமிழ்நாடு
அரசு
இத்தலத்தின்
வழிபாட்டின் பலன்
சூரிய
தோஷங்கள் நீங்கும்
கண்
ஒளி கிடைக்கும்( நேத்திரரோக நிவர்த்தி)
தாய்,தந்தையின்
உடல் நலன் மேம்படும்
பூர்வீக
சொத்துக்கள் கிடைக்கும்
தேக
ஆரோக்கியம், உத்தியோக உயர்வு கிடைக்கும்
தொடர்புக்கு
பா.வேதாசலம்
பரம்பரை அறங்காவளர்(த.ப.நீ)
https://arulmiguarkeeswarartemple.blogspot.com
கைபேசி - 8220147289
https://www.google.com/maps/place/Arulmigu+Arkeeswarar+Temple/@12.9712563,80.1301371,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a525f64d2c7ed45:0xf7f8eb73e395fd4c!8m2!3d12.9712511!4d80.1323258
https://www.google.com/maps/place/Sooriamman+Temple/@12.9720999,80.1331869,18z/data=!4m5!3m4!1s0x3a525fcf9b9dbee7:0xbf31992bde7321de!8m2!3d12.9717696!4d80.1323153
31/10/2020 சனி கிழமை அன்று அன்னாபிஷேகம் சிவ பெருமானுக்கு நடைபெறுகிறது.அனைவரும் கலந்துகொண்டு இறைவனுடைய அருளை பெருமாறு தங்களை கேட்டு கொள்கிறேன்.
I really wonder after seeing this koil story..VERY VERY lot of Important old Pallava kala koil ..REALLY PAMMAL IS VERY ON LD TOWN ..THIS SURIYAMMAN THAI.. PAMMAL MAAKAL ELLARUKKUMARUL KODUTHU VARUKIRATHU.IN PAMMAL PEOPLE ALL ARE EARE VERY VERY GOOD HEALTH AND ALL ARE HARD WORKERS TI EARN MONEY.. Swamy..Ankeeswarar.
ReplyDelete.all are safe no more CORANA VIRAS in PAMMAL area like other Royapuram,Thiruvittiyur area.. SURIYAMMAN THAI ARUL ELLARUKUM KIDAIKIRATHU..
.VALKA VALAMUTAN... ANBULLA S RAJAGOPAL CAO CHENNAI TELEPHONE RETD BSNL VEDAGIRI 2 CROSS STREET PAMMAL..I AM HERE LAST 40;YEARS WORKING CENTRAL G Govt..but no serious health affected my FAMILY..ALL BY AMMAN ARUL
..
தங்களின் சேவை ஆலயத்திற்கு தேவை மேலும் இவ்வாலய வலைத்தள பக்கத்தை தெரிந்த நண்பர்களுக்கு பகிரவும்
Deleteஅன்புடன்
பா.வேதாச்சலம்
S.. RAJAGOPAL CAO CHENNAI TELEPHONE RETD PAMMAL CHENNAI..
ReplyDeleteSUPER ABOUT SURIYAMMAN THAI ARUL ELLARUKUM KIDAIKIRATHU
ReplyDelete.R.. KAMATCHI RAJAGOPAL VEDAGIRI 2 CROSS STREET PAMMAL
மிகவும் அருமையான கோவில். மன அமைதி பெற தியானம் செய்ய நல்ல இடம்.
ReplyDelete